கடற்கன்னி போல் 42.2 கிலோமீட்டர் நீந்தி கின்னஸ் சாதனை படைத்த பெண்!
கடலில் 42.2 கிலோமீட்டர் கடற்கன்னி போல் நீந்தி மோனோஃபின் நீச்சலுக்கான கின்னஸ் சாதனையை அமெரிக்க பெண்மணி முறியடித்துள்ளார்.
ஈகோ மெர்மெய்ட் (Eco Mermaid) என்று அழைக்கப்படும் புளோரிடாவைச்ச சேர்ந்த மெர்லே லீவாண்ட் (Merle Liivand) என்ற பெண் மோனோஃபின் (Monofin) அணிந்து கடற்கன்னி போல், கடலில் 42.2 கிலோமீட்டர் நீந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கின்னஸ் புத்தகத்தின் படி, மே 7, 2022 அன்று, மியாமியின் 'ஈகோ மெர்மெய்ட்' மெர்லே லீவாண்ட் மியாமி கடற்கரையில் 11 மணிநேரம் மற்றும் 54 நிமிடங்களுக்குள் 42.2 கிலோமீட்டர்களை (26.22 மைல்கள்) கடலில் நீந்தி தனது சொந்த சாதனையை முறியடித்தார்.
இதையும் படிங்க: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 மாத குழந்தையை பத்திரமாக மீட்ட இராணுவ வீரர்கள்!
அவர் ஒரு தொழில்முறை நீச்சல் வீரர் என்பதையும் தாண்டி, அவர் நான்கு முறை உலக சாதனை படைத்தவர், கடல் பாதுகாவலர் மற்றும் கடலை மீட்பதற்காக பணிபுரியும் aquapreneur ஆவார்.
Merle Liivand எஸ்தோனியாவின் தாலின் நகரைச் சேர்ந்தவர். அவர் ஒரு பனி நீச்சல் வீரர் மற்றும் முன்னாள் பால்டிக் சாம்பியன் ஆவார், அவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு புளோரிடாவுக்கு குடியேறினார்.
இதையும் படிங்க: எவரெஸ்ட் சிகரத்தில் உக்ரேனியக் கொடியை ஏற்றிய ரஷ்ய பெண்மணி!