ஐடன் அஸ்லின் உட்பட ஐந்து பிரித்தானிய போர்க் கைதிகள் விடுவிப்பு: மனம் இறங்கிய ரஷ்யா
சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போர் கைதிகளை விடுவித்த ரஷ்யா.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐடன் அஸ்லின் உட்பட ஐந்து பிரித்தானியர்கள் விடுவிப்பு.
உக்ரைன் போரில் சிறைபிடிக்கப்பட்ட ஐந்து பிரித்தானிய போர்க் கைதிகள் பத்திரமாக விடுதலை செய்யப்பட்டு இருப்பதை பிரதமர் லிஸ் ட்ரஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் உக்ரைனின் கிழக்கு பகுதியான டொனெட்ஸ்க்கில் நடைபெற்ற போர் தாக்குதலில் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரித்தானிய வீரர்கள் ஐந்து பேர் ரஷ்ய படைகளால் கைது செய்யப்பட்டனர்.
REUTERS
இந்நிலையில், ரஷ்யாவுடன் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) மத்தியஸ்தத்தில் ஈடுபட்டு உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்ட பிரித்தானிய வீரர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
அதனடிப்படையில் தற்போது ரஷ்ய ஆதரவு படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட ஐந்து பிரித்தானிய பிரஜைகள் பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதில் மரணத் தண்டனை வரை விதிக்கப்பட்டு இருந்த ஐடன் அஸ்லின் என்ற பிரித்தானிய வீரரும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Shutterstock
மேலும் விடுவிக்கப்பட்ட ஐந்து பிரித்தானிய வீரர்களில் ஷான் பின்னரும், அவருடன் அமெரிக்க குடிமக்களான அலெக்சாண்டர் ட்ரூக்(39) மற்றும் ஆண்டி ஹய்ன் (27) ஆகியோரும் விடுவிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் ட்விட்டரில் வெளியிட்ட கருத்தில், கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுடைய பினாமிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட ஐந்து பிரித்தானிய பிரஜைகள் பத்திரமாக திருப்பி அனுப்பப்படுகிறார்கள், அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஏற்பட்ட பல மாத நிச்சயமற்ற நிலை மற்றும் துன்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
AFP via Getty Images
கூடுதல் செய்திகளுக்கு: "டம்மி கைகளுடன்" சுற்றும் மன்னர் சார்லஸ்-சின் மெய்க்காப்பாளர்கள்: ரசிகர்கள் கண்ணில் சிக்கிய ஏமாற்று வேலை!
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கிரெம்ளினுடன் செய்த மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் 5 பிரித்தானிய கைதிகள் உட்பட 10 கைதிகள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Twitter