காபூல் விமான நிலையத்தை குறிவைத்து சரமாரி ராக்கெட் தாக்குதல்.. பீதியில் உறைந்த மக்கள்! வெளியான திகிலூட்டும் காட்சி
காபூல் விமான நிலையத்தை குறிவைத்து சரமாரி ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நகர மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸதானிலிருந்து மக்களை வெளியேற்றும் இறுதிகட்ட பணியில் அமெரிக்க உட்பட வெளிநாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை அதிகாலை காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து சுமார் 5 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க இராணுவம் அதன் சி-ரேம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி ராக்கெட் தாக்குதலை முறியடித்ததாக கூறப்படுகிறது.
எனினும், அனைத்து ராக்கெட்டுகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என ABC நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
காபூலின் Khair Khana பகுதியிலிருந்து கார் ஒன்றிலிருந்து விமானத்தை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பல ராக்கெட்டுகள் நகரின் பல பகுதிகளில் தாக்கியதாக ஆப்கானிஸ்தான் ஊடகமான TOLO நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த ராக்கெட் தாக்குதலில் தங்கள் வீரர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், மக்களை வெளியேற்றும் பணிகளில் எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Forth Footage-Rockets were fired through this car in Kabul pic.twitter.com/oGvSqgWD9B
— Muslim Shirzad (@MuslimShirzad) August 30, 2021
இதனிடையே, இந்த ராக்கெட் தாக்குதலில் குழந்தை ஒன்று கொல்லப்பட்டதாக உள்ளூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Multiple Rockets fired near #Kabul_Airport 1 Killed 3 Injured#Afganistan #Biden #Messi #boxing #BBNaijia6 #GoldMedal #Janmashtami #Janamashtami #Javelin #Janmashtami2021 #KrishnaJayanthi #COVID19 #radheradhe #TokyoParalympics #UFCVegas35 #mondaythoughts #sundayvibes #UFCVegas35 pic.twitter.com/zORfAVcwKi
— Arzoo khan (@Arzoo250698) August 30, 2021
தற்போது வரை இந்த ராக்கெட் தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.