நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: பதறவைக்கும் காட்சிகள்
Flash floods wipe out a suspension bridge in Nepal: நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆகத்து மாதம் 26ஆம் திகதி நிகழ்ந்த நேபாளப் பெருவெள்ளத்தின்போது 1,445 பேர் கொல்லப்பட்டனர், 5,285 பேரைக் காணவில்லை.
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
இந்நிலையில், மீண்டும் நேபாளத்திலுள்ள நதி ஒன்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று புத்தி கண்டகி என்னும் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், பாலம் ஒன்று அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த துயர சம்பவத்தின்போது வெள்ளத்தில் சிக்கிய 95 பேரை ராணுவம் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் ஒன்பது பேர் வெளிநாட்டவர்கள்.
என்றாலும், ஐந்து பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.
இந்தப் பெருவெள்ளத்தின்போது ஐந்து பாலங்களும், மூன்று நீர் மின் நிலையங்களும் சேதமடைந்துள்ளதாகவும், ஒரு இடத்திலிருந்து 18 பேர் மீட்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலங்கள் தகர்ந்துபோனதால் சில இடங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஹெலிகொப்டர்கள் மூலம் மட்டுமே அந்தப் பகுதிகளுக்கு உணவு முதலான உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இதற்கிடையில், வெள்ளம் குறித்து அரசு தாமதமாகவே எச்சரிக்கை விடுத்ததாக மக்கள் கூறுகிறார்கள்.
உள்ளூர் மக்கள், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்னதாகவே ஒருவருக்கொருவர் தகவல் அனுப்பி, எச்சரிக்கை ஒலி ஒலிக்கச் செய்து பாதுகாப்பாக காட்டுக்குள் செல்ல, சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் அரசின் எச்சரிக்கை செய்தி தங்களை வந்தடைந்ததாக தெரிவிக்கிறார்கள் மக்கள்!