பிரித்தானியர்களுடன் ஸ்பெயினுக்கு புறப்பட்ட விமானம்: திடீரென புறப்பட்ட இடத்துக்கே திரும்பியதன் மர்மம்
பிரித்தானியாவின் மான்செஸ்டர் விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் தீவு ஒன்றிற்கு புறப்பட்ட விமானம் ஒன்று, திடீரென மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய சம்பவம் ஒன்று நடந்தது.
திடீரென திரும்பிய விமானம்
புதன்கிழமையன்று, பிரித்தானியாவின் மான்செஸ்டரிலிருந்து ஸ்பெயின் தீவான Ibizaவுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு, திடீரென அந்த விமானம் மான்செஸ்டர் விமான நிலையத்துக்கே திரும்பியது. சிறிது நேரம் வானில் வட்டமடித்தபின், விமானம் மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
காரணம் என்ன?
விமானத்தில் ஏற்பட்ட ஒரு சிறு பிரச்சினையே இந்த சம்பவத்துக்குக் காரணம் என்றும், ஆனால், அந்த பிரச்சினையால் பயணிகளுக்கோ, விமான ஊழியர்களுக்கோ அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
விமானம் தரையிறங்கியதும், உடனடியாக பயணிகள் அனைவரும் வேறொரு விமானத்தில் ஏற்றப்பட்டு Ibiza தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். விமானத்தில் என்ன பிரச்சினை என்பது தெரிவிக்கப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |