உலகின் நீண்ட நேரம் நடைபெற்ற தேர்வு - சத்தத்தை குறைக்க விமானங்கள் நிறுத்தம்
உலகின் நீண்ட நேரம் நடைபெற்ற தேர்வு காரணமாக விமானங்கள் நிறுத்தபட்டுள்ளது.
உலகின் நீண்ட நேர தேர்வு
தென் கொரியாவில் ஒவ்வொரு நவம்பர் மாதமும், பல்கலைக்கழக நுழைவு தேர்வான Suneung நடைபெறும். நேற்று நடைபெற்ற இந்த தேர்வு உலகின் நீண்ட நேர தேர்வாக கருதப்படுகிறது.

காலை 08;40 க்கு தொடங்கும் இந்த தேர்வு மாலை 17;40 வரை எந்த ஒரு உணவு இடைவேளை கூட இல்லாமல் தொடர்ந்து 8 மணி நேரம் நடைபெறும்.
அதுவே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளாக இருந்தால், இரவு 21;48 வரை கூடுதல் 5 மணி நேரத்துடன் 13 மணி நேரம் நடைபெறும்.
நேற்று நடைபெற்ற இந்த தேர்வுக்கு 5,54,174 பேர் விண்ணப்பித்திருந்தனர். இது கடந்த ஆண்டை விட 6% அதிகமாகும்.
விமானங்கள் நிறுத்தம்
இந்த தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து நெரிசலால் இடையூறு ஏற்படக்கூடாது என கருதி, அரசு அலுவலகங்கள், பங்கு சந்தைகள் காலையில் ஒரு மணி நேரம் தாமதாமாக திறக்கப்பட்டன.

மேலும், ஆங்கில கேட்டறிதல் தேர்வின் போது சப்தம் இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக அந்த குறிப்பிட்ட நேரத்தில் விமானங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 65 சர்வதேச விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறங்குவதில் தாமதம் என மொத்தம் 140 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |