நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள்
Flood Hits Nepal’s Gorkha District: நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது.
அடித்து செல்லப்பட்ட வீடுகள் மற்றும் பாலங்கள்
ஞாயிற்றுக்கிழமை நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 35-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் அப்பகுதியில் இருந்த நீர் மின் நிலைய திட்டமும் பலத்த சேதமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இமயமலை பகுதியில் ஏற்பட்ட பெரிய பனிப்பாறை சரிவு மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்து இந்த இயற்கை சீற்ற சம்பவமானது ஏற்பட்டுள்ளது.
बुढीगण्डकीमा आएको बाढीबाट प्रभावित केही क्षेत्रको हेलिकोप्टरबाट लिइएका तस्विर https://t.co/gPNa0jWQ8t
— NDRRMA (@NDRRMA_Nepal) October 11, 2026
திரிசூலி ஆற்றின் துணை நதியான பூதி கண்டனி ஆற்றில் ஏற்பட்ட திடீர் நீர்மட்ட உயர்வு, சும்னுப்ரி கிராமப் பகுதியில் திடீர் வெள்ள பெருக்கை ஏற்படுத்தியது.
காலை 6.30 மணியளவில் ஆற்றின் நீர்மட்டம் 3.66 மீட்டராக இருந்த நிலையில், காலை 8.30 மணியளவில் 2 மீட்டருக்கும் அதிகமான அளவு உயர்ந்தது.
காலை 8.40 மணிக்கு ஆபத்தான வகையில் 5 மீட்டர் என்ற அளவை தாண்டி 8.43 மீட்டராக உயர்ந்தது.
இந்த வெள்ளப்பெருக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், சேறு, சகதி மற்றும் இடிபாடுகளுடன் சேர்ந்து ஆற்று நீரானது கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் கொந்தளித்து ஓடியது பார்க்க முடிகிறது.

உள்கட்டமைப்புகள் பெரும் அளவு சேதமடைந்த போதிலும், இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு சீராகும் வரை யாரும் ஆற்றின் அருகில் செல்ல வேண்டாம் என்று நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.