ஆப்பிரிக்க நாடுகளில் வரலாறு காணாத கனமழை: நிலச்சரிவில் சிக்கி 135 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடுகளான உகாண்டா மற்றும் ருவாண்டா நாடுகளில் பெய்த கனமழை காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 135 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வரலாறு காணாத மழை
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான உகாண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
@rwandatv
ஏற்கனவே கடுமையான வறட்சியால், அடிப்படை தேவையான உணவு மற்றும் நீருக்கே கஷ்டப்பட்டு வந்த அந்நாட்டு மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இவ்வெள்ள பெருக்கால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
நிலச்சரிவால் பலி
ருவாண்டா நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு அதில் 129 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் மற்றொரு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 6 பேர் நிலச்சரிவால் உயிரிழந்துள்ளனர். மக்கள் தங்களது வீடுகளை இழந்து பரிதவிக்கின்றனர்.
@rwanadatv
’நள்ளிரவு இரண்டு மணியில் திடீரென அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, நாங்கள் பயந்து போனோம்' என மேற்கு ருவாண்டாவை சேர்ந்த நிபாக்வயர்(47) என்ற பெண் கூறியுள்ளார். அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
@UNICEF
ருவாண்டாவின் அவசர மேலாண்மை அமைச்சகம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில்,இந்த ஆண்டில் இயற்கை சீற்றத்தால் மட்டும் 60 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1205 பேர் வீடு இல்லாமல் துயரப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தன.
@rwanadatv
இந்நிலையில் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்க கூடும் என்றும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அந்நாட்டு அரசு தரப்பு அறிவித்துள்ளது.