இந்தோனேசியாவில் வெள்ளம்: 117 சடலங்கள் மீட்பு! பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு
இந்தினேசியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 117-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசிய மாகாணமான கிழக்கு Nusa Tenggara-வில் Seroja வெப்பமண்டல புயலால் தூண்டப்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை 117-ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.
"கண்டுபிடிக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது, 76 பேர் இன்னும் காணவில்லை" என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஏஜென்சியின் தலைவர் Doni Monardo தெரிவித்துள்ளார்.
கிழக்கு புளோரஸ் மாவட்டத்தில் 60 பேர், லெம்பட்டா மாவட்டத்தில் 28 பேர், அலோர் மாவட்டத்தில் 21, மலாக்கா மாவட்டத்தில் 3 பேர், எண்டே மாவட்டத்தில் ஒருவர், சாபு ரைஜுவா மாவட்டத்தில் 2 பேர், குபாங் மாவட்டத்தில் ஒருவர் மற்றும் குபாங் நகரத்தில் ஒருவர் இருந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த பேரழிவுகளில் 146 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 8,424 பேர் தங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர், 45 பொது வசதி மையங்கள் சேதமடைந்துள்ளன.
343 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன, 133 வீடுகள் மிகுந்த சேதமடைந்தன, 110 வீடுகள் சற்று சேதமடைந்தன.
செரோஜா புயல் தாக்கிய பின்னர் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் ஆறு மீட்டர் வரை அதிக கடல் அலைகள் போன்ற தீவிர வானிலை சீற்றங்கள் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது, செரோஜா புயல் காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. ஆனால் அதன் தாக்கம் பலவீனமடைந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

