இந்திய விமானியைத் தாக்கிய நபர் பிரித்தானிய பல்கலையில் படித்தவர்: புதிய தகவல்
Pilot who attacked captain studied aviation management at British university: இந்திய விமானியைத் தாக்கிய நபர் பிரித்தானிய பல்கலையில் விமான மேலாண்மை படித்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
விமானி ஒருவர், துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் புறப்பட்ட Flydubai நிறுவன விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, விமானத்தை தரையில் மோத முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், அந்த நபர் பிரித்தானிய பல்கலை ஒன்றில் படித்தவர் என தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
புதிய தகவல்
துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் புறப்பட்ட Flydubai நிறுவன விமானம் சுமார் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென, விமானத்தை தரையில் மோதவைக்க முயன்றுள்ளார் விமானிகளில் ஒருவர்.

அந்த விமானத்தின் விமானியும், இந்தியருமான ஸ்மித் (Captain Smit Machchhar) அதை தடுக்க முயல, அவரை கோடரி ஒன்றினால் சரமாரியாகத் தாக்கியுள்ளார் அவரது சக விமானி.
விமானத்தைத் தரையில் மோதி, 180 பேரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற அந்த நபருடைய பெயர் ஹமாம் அல் ஹமாமி (29).
ஓமான் நாட்டவரான அல் ஹமாமி, இங்கிலாந்திலுள்ள Buckinghamshire New University என்னும் பல்கலையில் விமான மேலாண்மை படித்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மூன்று ஆண்டுகள் தொலைதூரக் கல்வி முறையில் அந்தப் பல்கலையில் படித்த அல் ஹமாமி, 2023ஆம் ஆண்டு விமான மேலாண்மையில் பட்டம் பெற்றுள்ளார்.
என்றாலும், அவர் அந்த பல்கலையில் விமானியாக பயிற்சி பெறவில்லை என பல்கலை அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.