காபூலில் பசியால் வாடும் பிஞ்சுகள்.. ஒரு பாட்டில் தண்ணீரின் விலை எவ்வளவு தெரியுமா? கதறும் ஆப்கன் மக்கள்
காபூல் விமானநிலையத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறிய உடனே தாலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றிவிட்டனர். அதுமட்டும் இல்லாமல் அந்நாட்டில் அவர்களது ஆட்சி கொடிகட்டி பறக்க மும்முரமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாலிபான்களின் கொடூர செயல்களுக்கு பயந்து அந்நாட்டு மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தங்களுக்கு ஒரு விடிவு காலம் வராதா? இந்த மரண பூமியில் இருந்து தப்பிக்க மாட்டோமா என்று ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமானநிலையத்தில் காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஒரு தண்ணீர் பாட்டில் 40 டொலர் அதாவது சுமார் 3000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு தட்டு சோறு 100 டொலருக்கு விற்கப்படுகின்றது.
இந்த கடினமான நேரத்தில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய வீரர்கள் ஆப்கானியர்களுக்கு உதவுகிறார்கள்.
விமான நிலையத்திற்கு அருகில் தற்காலிக வீடுகளை கட்டி குடியிருப்புவாசிகளுக்கு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவுகளை வழங்கி வருவது கொஞ்சம் ஆறுதலாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.