எடையை வேகமாக குறைக்க ஆசையா? இந்த இரண்டு உணவுகளை சேர்த்து எடுத்துகோங்க!
இன்றைய காலத்தில் பலரும் உடல் எடையை குறைக்க பெரிதும் கஷ்டப்பட்டு கொண்டு வருகின்றார்கள்.
இது உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஆரோக்கியப் பிரச்சினையாக மாறியிருக்கிறது.
ஏனெனில் உடல் பருமன் உருவத் தோற்றத்தை மட்டுமல்லாது வேறு நிறைய நோய்களை உருவாக்கி விடுகின்றது. இதை தடுக்க ஒரே வழி உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து, எடையைக் குறைப்பது தான் சிறந்தது.
அப்படி எடையை வேகமாகக் குறைக்க இரண்டு கொலஸ்ட்ராலை எரிக்கும் பண்புகள் கொண்ட இரண்டு வித உணவுகளை ஒன்றாக சேர்த்து எடுத்துக் கொள்வது அதிக பலனைக் கொடுக்கும்.
அப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய சில உணவு என்னென்ன என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
காபியும் இலவங்கப்பட்டையும்
காபியில் இலவங்கப்பட்டை சேர்த்து குடிப்பதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்தும். அதேபோல அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க முடியும். இலவங்கப்பட்டை தொப்பை மற்றும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுவதோடு அதிகமாக சாப்பிடும் மனநிலையையும் மாற்றுகிறது.
க்ரீன் டீ - எலுமிச்சை சாறு
க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாறு கலந்து எடுத்துக் கொண்டால், அது உடல் எடை குறைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எலுமிச்சை சாறிலும் கொலஸ்டிராலை எரிக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கிறது. இவை இரண்டும் ஒன்றாக சேரும்போது எடை இழப்பு வேகமாக நடக்கும்.
பாதாமும் தயிரும்
வேகமாக எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை அல்லது மதிய உணவோடு பாதாமையும் தயிரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
சிக்கனும் சிவப்பு மிளகாயும்
சிக்கனும் சிவப்பு மிளகாயும் இரண்டையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது உடலில் சேரும் கொழுப்பை எளிதில் கரைத்து வேகமாக எடையைக் குறைக்க முடியும்.
உருளைக்கிழங்கும் மிளகும்
எடையை வேகமாகக் குறைக்க நினைப்பவர்கள் பேக் செய்யப்பட்ட உருளைக்கிழங்கில் சிறிது மிளகு பொடி சேர்த்து சாப்பிட்டு வர எடை வேகமாகக் குறையும்.