6000 கவிதைகள்., உணவு டெலிவரி ஊழியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது
சீனாவில் உணவு டெலிவரி செய்யும் பணியாளருக்கு அந்நாட்டின் மதிப்புமிக்க லு சூன் இலக்கிய பரிசு வழங்கப்பட்டுள்ளது.
சீனாவின் உயரிய இலக்கிய விருது
சீனாவைச் சேர்ந்த வாங் ஜிபிங் என்ற நபருக்கு கவிதை பிரிவில் சீனாவின் உயரிய இலக்கிய பரிசு வழங்கப்பட்டுள்ளது.
உணவு டெலிவரி பணியாளரும், கவிஞருமான வாங் ஜிபிங், நவீன சீன இலக்கிய உலகின் தந்தை என்று அழைக்கப்படும் லு சூன் பெயரில் வழங்கப்படும் இந்த உயரிய விருதை பெற்றுள்ளார்.
சீனாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் அன்றாடப் போராட்டங்கள், சவால்கள் மற்றும் விரக்திகளை மையமாக வைத்து Low Flight என்ற கவிதைத் தொகுப்பை வாங் ஜிபிங் நூலாக எழுதியுள்ளார்.

இந்த நூலை எழுதுவதற்காக கிட்டத்தட்ட 200 உணவு டெலிவரி ஊழியர்களுடன் பேசியுள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 1,50,000 கிலோமீட்டர் பயணம் செய்துள்ள வாங் ஜிபிங், தன்னுடைய ஓய்வு நேரங்களில் இதுவரை 6000 க்கும் அதிகமான கவிதைகளை எழுதியுள்ளார்.
ஜியாங்சு மாகாணத்தில் பிறந்த வாங் ஜிபிங், பொருளாதார நெருக்கடி காரணமாக தன்னுடைய பள்ளியில் இருந்து விலகினார். உணவு டெலிவரி வேலைக்கு முன்பு, கட்டுமானம், குப்பை சேகரிப்பு மற்றும் தெருவோர வியாபாரம் போன்ற பல்வேறு பணிகளை செய்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |