தானிய இறக்குமதி தடை: அண்டை நாடுகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கும் உக்ரைன்
உக்ரைனில் இருந்து தானிய இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய அண்டை நாடுகள் மீது அந்த நாடு வழக்கு தொடர்ந்துள்ளது.
மலிவான தானிய இறக்குமதி
உலக வர்த்தக அமைப்பிடம் ஸ்லோவாக்கியா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் மீது உக்ரைன் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் ஐரோப்பிய ஒன்றிய அண்டை நாடுகளால் விதிக்கப்படும் இத்தகைய கட்டுப்பாடுகள் சர்வதேச கடமைகளை மீறும் செயலாகும் எனவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
@epa
ஆனால் தங்கள் வேளாண் மக்களை மிக மலிவான தானிய இறக்குமதியில் இருந்து காக்கவே தடை விதித்துள்ளதாக அந்த நாடுகள் விளக்கமளித்துள்ளன. ரஷ்யாவின் கடும் நெருக்கடி காரணமாக கருங்கடல் கப்பல் பாதை மொத்தமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், வேறு பாதுகாப்பான பாதையை உருவாக்கும் நெருக்கடிக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது.
இதனால் டன் கணக்கிலான தானியங்கள் மத்திய ஐரோப்பாவில் குவிக்கப்படும் சூழல் உருவானது. உள்ளூர் விவசாயிகள் இந்த நிலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், உக்ரைன் தானிய இறக்குமதியானது உள்ளூர் சந்தையை மொத்தமாக பாதிப்பதாக முறையிட்டுள்ளனர்.
முடிவை ஏற்க மறுத்துள்ள
இந்த நிலையில், 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் உக்ரைனின் இறக்குமதி மீதான வர்த்தகக் கட்டுப்பாடுகளை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டது.
@reuters
அத்துடன், பல்கேரியா மற்றும் ருமேனியா நாடுகளும் இந்த வர்த்தகக் கட்டுப்பாட்டில் இணைந்துகொள்ள, செப்டம்பர் 15ம் திகதி வரை நீடிக்கும் என அப்போது முடிவானது.
தற்போது, செப்டம்பர் 15ம் திகதிக்கு பின்னர் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை ஏற்க மறுத்துள்ள ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனையடுத்தே உக்ரைன் இந்த மூன்று நாடுகள் மீதும் வழக்கு தொடர முன்வந்துள்ளது. இருப்பினும், தடை நீடிக்கும் என்ற உறுதியில் போலந்து உள்ளது. இருப்பினும் இந்த மூன்று நாடுகளும் உக்ரைன் தானியங்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |