வந்தே பாரத் ரயில் ஊழியரை கன்னத்தில் அறைந்த பயணி.., சைவ உணவுக்கு பதில் அசைவ உணவு கொடுத்ததால் ஆத்திரம்
வந்தே பாரத் ரயிலில் சைவ உணவுக்கு பதில் அசைவ உணவு கொடுத்த ஊழியரை பயணி ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வந்தே பாரத் ரயில்
கடந்த 26 -ம் திகதி ஹவுராவிலிருந்து ராஞ்சிக்கு வந்தே பாரத் ரயில் சென்றது. அதில், வயதான பயணி ஒருவர் சைவ உணவு ஓர்டர் செய்திருந்தார்.
ஆனால், அவருக்கு கேட்டரிங் ஊழியர் தவறுதலாக அசைவ உணவை வழங்கினார். அந்த உணவை பயணி பிரித்து சாப்பிட தொடங்கியதும் அசைவ உணவு என்று தெரிந்து விட்டது.
பின்னர், வயதான பயணிக்கு கடுமையான கோபம் வந்ததால் உணவுவிநியோகம் செய்த ஊழியரை அழைத்து விளக்கம் கேட்டார்.
அதற்கு அந்த ஊழியர் தான் தவறுதலாக கொடுத்துவிட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்டார். ஆனால், ஊழியரை இருமுறை கன்னத்தில் பயணி அறைந்தார்.
இதனை பார்த்த மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்து ஊழியருக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கேட்டரிங் ஊழியரிடம் ரயில் பயணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸார் மற்றும் கேட்டரிங் மேலாளர் ஆகியோர் வந்து ஊழியரை தாக்கியது தவறு என்று கூறினர்.
அப்போது அவர் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்காமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இதனால், ஆத்திரமடைந்த சக பயணி ஒருவர் அந்த முதியவரை அடிப்பதற்கு கையை ஓங்கினார். பின்னர், அந்த வயதான பயணி தனது இருக்கைக்கு சென்றுவிட்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |