கனடாவில் உணவுப் பொருட்களின் விலையில் மிகப்பெரிய மாற்றம்
8 ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவில் உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளது.
கனடாவில் உணவுப் பொருட்களின் விலை 2017 மே மாதத்திற்குப் பிறகு, முதல் முறையாக 2025 ஜனவரியில் குறைந்துள்ளது.
இருப்பினும், ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த பணவீக்கம் டிசம்பருடன் ஒப்பிடும்போது சற்று உயர்ந்துள்ளது என்று என Statistics Canada தெரிவித்துள்ளது.
பணவீக்க விகிதம் 1.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது டிசம்பர் மாதத்தில் இருந்ததை விட 0.1% அதிகம்.
அதேபோல், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை உயர்வு காரணமாக, எரிசக்தி விலை 5.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும், வாகன செலவுகள் 2.3 சதவீதத்தில் இருந்து 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தங்குமிடத்திற்கான செலவு 4.5 சதவீதமாக நிலையாக இருக்கின்றன.
இதனிடையே உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளது.
- உணவகங்களின் விலை 5.1 சதவீதம் குறைந்துள்ளது.
- மொத்த உணவுப் பொருட்களின் விலை 0.6 சதவீதம் குறைந்துள்ளது.
- மதுபானம், புகையிலை, கஞ்சா பொருட்களின் விலை 1 சதவீதம் குறைந்துள்ளது.
இந்த விலை குறைவு GST/HST வரி தள்ளுபடி திட்டத்தால் ஏற்பட்டுள்ளது என்று RSM கனடா பொருளாதார நிபுணர் து ஙுயென் (Tu Nguyen) கூறினார்.
வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்கலாம்
- டிரம்ப் நிர்வாகத்தின் 25 வரி திட்டம் கனடாவுக்கு பிரச்சினை ஏற்படுத்தலாம்
- வேலைவாய்ப்பு நிலவரம் மற்றும் வர்த்தக சிக்கல்கள் - வங்கி வட்டி விகித முடிவுகளை பாதிக்கலாம்
- மார்ச் மாதத்தில் வங்கி வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்பு உள்ளது
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடரும் என கனடா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |