உணவு பற்றாக்குறையால் திருமணம் ரத்து: காவல் நிலையத்தில் கரம் பிடித்த மணமக்கள்
சூரத் நகரில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக திருமண விழா ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவுத் தட்டுப்பாடால் தடைப்பட்ட திருமணம்
பீகாரைச் சேர்ந்த ராகுல் பிரமாத் மஹ்தோவுக்கும், அஞ்சலி குமாரிக்கும் வராச்சா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருந்தது.
திருமண சடங்குகள் முடிந்த நிலையில், உணவு பற்றாக்குறை காரணமாக மணமகனின் தந்தை திருமணத்தை நிறுத்தினார்.
பொலிஸ் தலையீடு
மணமகள் வீட்டார் பொலிஸில் புகார் செய்ய, துணை பொலிஸ் கமிஷனர் அலோக் குமார் தலையிட்டு மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்தார். ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டனர்.
பின்னர், மணமகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, பொலிஸாரே எளிய முறையில் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்தனர்.
காவல் நிலையத்தில் மாலை மாற்றிக் கொண்ட மணமக்கள், கணவன் மனைவியாக மகிழ்ச்சியுடன் வெளியேறினர்.
குடும்பத் தகராறு காரணமாக திருமணம் தடைபடாமல் இருக்க போலீசார் எடுத்த இந்த நடவடிக்கை பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |