உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை விரட்டி அடிக்கனுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...
Fat
Heart Attack
Food
bad cholesterol
cholesterol
Stroke
By Kishanthini
பொதுவாக இன்றைய காலத்தில் பலரும் கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள்
நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்ற பெரிய பிரச்சனைகளில் கொண்டு விட்டு விடும்.
எனவே இவற்றை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. அந்தவகையில் தற்போது கெட்ட கொலஸ்ட்ராலை உடலில் இருந்து விரட்ட என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
- உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க எளிய வழி பீன்ஸ் சாப்பிடுதாகும். ஏனெனில் நான்கு வாரத்திற்கு தினமும் ஒரு கப் பீன்ஸ் சாப்பிட்டு வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவது.
- ஆப்பிளை சாப்பிடும் போது அதை தோலுடன் சாப்பிடுங்கள். இது கொலஸ்ட்ரால் இரத்தத்தில் உறிஞ்சப்படுவதைத் தடுக்க உதவுகிறது.
- ஓட்ஸ் சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் இது கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுப் பொருளாகும். இதில் உள்ள பீட்டா குளுக்கன் நார்ச்சத்து, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலுடன் பிணைந்து, உடலில் இருந்து எளிதில் வெளியேற்றுகிறது.
- உலர்ந்த ப்ளம்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு பல சத்துக்கள் கிடைக்கும். முக்கியமாக இது உடல் எடையை குறைக்க உதவுகின்றது. ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு உலர் ப்ளம்ஸ் சாப்பிடுவது கொழுப்பைக் குறைப்பதாக குறிப்படுகின்றது.
- உருளைக்கிழங்கு பொதுவாக மாவுச்சத்து நிறைந்த காய்கறி. கூடுதலாக இதில் கார்போஹைட்ரேட்டுகளுடன், கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. இந்த நார்ச்சத்து இரத்தத்தில் கொழுப்புக்கள் உறிஞ்சப்படுவதைக் குறைக்கும். இது நல்ல கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துகிறது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US