பிரேசில் அகராதியில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் பெயரை சேர்த்து கவுரவிப்பு
கால்பந்து ஜாம்பவான் பீலேவின் பெயரை பிரேசில் அகராதியில் பொருளாக சேர்த்து கவுரவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து ஜாம்பவான் பீலே
கால்பந்து உலகில் உச்ச நட்சத்திர ஜாம்பவனாக பீலே வலம் வந்தார். இவர் உலகளாவிய விளையாட்டு வீரரும், பிரேசிலின் முன்னாள் விளையாட்டு அமைச்சருமாவார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன் 82வது வயதில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
பீலேவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பீலே 2000ம் ஆண்டு சர்வதேச கால்பந்து வரலாறு மற்றும் புள்ளியியல் கூட்டமைப்பால் (IFFHS) நூற்றாண்டின் உலக வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். FIFA நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற இருவரில் இவரும் ஒருவர்.
பிரேசில் அகராதியில் கவுரவிப்பு
இந்நிலையில், கால்பந்து ஜாம்பவான் பீலேவின் பெயரை பிரேசில் அகராதியில் சிறந்த, ஒப்பற்ற, தனித்துவமான ஆகிய வார்த்தைகளின் பொருளாக சேர்த்து கவுரவிக்கப்பட்டுள்ளது.
‘அசாதாரணமானவர் அல்லது தனது தரம், மதிப்பால் உயர்ந்தவர், பீலேவைப் போல யாருடனும் ஒப்பிட முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மைக்கேலிஸ் அகராதியின் முடிவை பிரேசிலில் உள்ள ஏராளமான பீலே ரசிகர்கள் கொண்டாடினர். மைக்கேலிஸ் அகராதி நாட்டின் மிக பிரபலமான அகராதிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
O REI OFICIALMENTE ESTÁ NO DICIONÁRIO!
— Pelé (@Pele) April 26, 2023
Ele é o pelé do Basquete. Ela é a pelé do Tênis. A expressão que já era usada para se referir ao melhor naquilo que faz está eternizada nas páginas do dicionário! Juntos fizemos história e colocamos o nome do Rei do futebol na nossa língua… pic.twitter.com/Yy5RwWjq8J