அமெரிக்காவில் 60,956 வாகனங்களை திரும்ப பெறும் Ford: NHTSA தகவல்
Ford Recalls Nearly 61,000 Transit Vans in U.S: அமெரிக்காவில் முழுவதும் சுமார் 60,956 வாகனங்களை திரும்ப பெறுவதாக ஃபோர்டு மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
60,956 வாகனங்களை திரும்ப பெறும் போர்டு
போர்டு நிறுவனம் தங்களது டிரான்சிட் வேன்களில் உள்ள பாடி கண்ட்ரோல் மாடியூலில் ஏற்பட்டுள்ள மென்பொருள் கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் சுமார் 60,956 வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
இந்த திரும்ப பெறும் நடவடிக்கை 2026 ம் ஆண்டு மாடலான ஃபோர்டு டிரான்சிட்(Ford Transit) வேன்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பாதுகாப்பு ஆவணங்களில் இந்த தகவலானது வெளியாகியுள்ளது.

பாடி கண்ட்ரோல் மாடியூல் சி(BCMC) அமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த மென்பொருள் கோளாறு காரணமாக அந்த அமைப்பு திடீரென செயலிழக்க வாய்ப்பு இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
BCMC செயலிழப்பதன் மூலம் வாகனத்தின் டிரெய்லர் விளக்குகள் மற்றும் உட்புற விளக்குகள் திடீரென அணைந்து போகக்கூடிய ஆபத்து இருப்பதாகவும், இதன் மூலம் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போர்டு நிறுவனம் பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ஃபோர்டு டீலர்ஷிப் மையங்கள் மூலம் கட்டணமின்றி BCMC அமைப்பு புதுப்பித்து கொடுக்கப்படும் என்று NHTSA தெரிவித்துள்ளது.