பிரான்சில் வருவாய் இழப்பை சந்தித்த வெளிநாட்டு தம்பதி: குடியிருப்பு அனுமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை
பிரான்சில் வாழும் வெளிநாட்டு தம்பதியர், புயலால் வருவாய் குறைந்ததால், எதிர்பாராத பிரச்சினை ஒன்றை சந்தித்துள்ளார்கள்.
குடியிருப்பு அனுமதியில் பிரச்சினை தென்மேற்கு பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களான தம்பதியர், தாங்கள் வாடகைக்கு விட்டிருந்த கட்டிடங்கள் புயலால் பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கு பண இழப்பு ஏற்பட்டது, வருவாய் குறைந்தது.
வருவாய் குறைந்ததைத் தொடர்ந்து, வழக்கமாக பல ஆண்டுகளுக்கான குடியிருப்பு அனுமதி கொடுக்கப்படும் நிலையில், இப்போது அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான தற்காலிக குடியிருப்பு அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அந்த தம்பதியர் பிரான்சில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவருகிறார்கள்.
ஆனால், அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அல்ல, பிரித்தானியர்களும் அல்ல.
சீரான வருவாயை எதிர்பார்க்கும் அதிகாரிகள் அதிகாரிகளைப் பொறுத்தவரை, அவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்கு சீரான வருவாய் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், அந்த தம்பதியரோ, நாங்கள் ஒழுங்காக எங்கள் வரி முதலான அனைத்துக் கட்டணங்களையும் பல ஆண்டுகளாக முறைப்படி, பொறுப்புடன் செலுத்தியிருக்கிறோமே, எங்களுக்கு அதிக ஆண்டுகள் பிரான்சில் வாழும் வகையிலான குடியிருப்பு அனுமதி வழங்கக்கூடாதா என்கிறார்கள்.