ஹைட்டி அதிபர் படுகொலையில் திடீர் திருப்பம்! பொலிஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
ஓய்வு பெற்ற கொலிம்பியன் இராணுவ வீரர்கள் அடங்கிய வெளிநாட்டு கூலிப்படை ஹைட்டி அதிபர் ஜொவினஸ் மோஸை படுகொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வாரம் ஹைட்டி அதிபர் ஜொவினஸ் மோஸை மர்ம கும்பல் அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த படுகொலை முயற்சியில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மோஸின் மனைவியும், முதல் பெண்மணியுமான மார்ட்டின், சிகிச்சைக்காக புளோரிடா கொண்டு சொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 26 கொலம்பியன்ஸ் மற்றும் ஹைட்டிகை பூர்விகமாக கொண்ட இரண்டு அமெரிக்கர்கள் அடங்கிய கூலிப்படை அதிபர் ஜொவினஸ் மோஸை படுகொலை செய்ததாக ஹைட்டி பொலிஸ் தெரிவித்துள்ளது.
இதில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 6 சந்தேக நபர்கள் தலைமறைவாக உள்ளனர்.
மீதமுள்ள சந்தேக நபர்கள் ஹைட்டி தலைநகர் Port-au-Prince பொலிசாருடன் நடந்து மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.