உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர தயார்! ஆனால் இவை சரிசெய்யப்பட வேண்டும் - ரஷ்யா
உக்ரைனில் போரை நிறுத்த ரஷ்யா தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் உக்ரைனில் போரை நிறுத்துமாறு கூறினார்.
உக்ரைன் தலைநகரில் நடந்த கொடிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்குப் பிறகு, புடினுக்கு நேரடியாக ட்ரம்ப் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
இந்த நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உக்ரைனில் போரை நிறுத்தும் ஒப்பந்தத்திற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
மும்முரமாக இருக்கிறோம்
அவர் கூறுகையில், "நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்டத் தயாராக இருக்கிறோம். ஆனால் இன்னும் சில குறிப்பிட்ட புள்ளிகள் உள்ளன. அவை நன்றாக சரிசெய்யப்பட வேண்டும். மேலும் நாங்கள் இதில் மும்முரமாக இருக்கிறோம்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் நகர்கின்றன. மேலும் தொடரும். இருப்பினும் அமெரிக்க ஜனாதிபதி ஒப்பந்தத்தின் கூறுகளை உச்சரிக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் வெள்ளிக்கிழமை புடினுடன் மற்றொரு சுற்று போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக ரஷ்யா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |