சர்வதேச பார்வையாளர்கள் ஜப்பானுக்குள் நுழைய தடை!
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கைக் காண சர்வதேச பார்வையாளர்கள் ஜப்பானுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
ஜூலை 23ம் திகதி முதல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், 2021 கோடையில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது சர்வதேச பார்வையாளர்களை ஜப்பானுக்குள் அனுமதிக்க முடியாது.
வெளிநாட்டவர்கள் வாங்கிய ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் திருப்பித் தரப்படும் என்று டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் 2021 க்கு ஒத்திவைக்கப்பட்டன.
உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுவதால், இந்த கோடைகால விளையாட்டுக்கள் வைரஸின் மீதான மனிதகுலத்தின் வெற்றிக்கான சான்றை வழங்க முடியும் என்று 2020 ஒலிம்பிக் அமைப்பாளர்கள் நம்பினர்.
டோக்கியோ ஏற்பாட்டுக் குழு தலைமை நிர்வாக அதிகாரி Toshiro Muto, சுமார் 6,00,000 ஒலிம்பிக் டிக்கெட்டுகள் மற்றும் 30,000 பாராலிம்பிக்ஸ் டிக்கெட்டுகளுக்கான கட்டணம் திருப்பித் தரப்படும் என்றார்.