வெளிநாட்டுப் படைகள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும்... இந்தியாவை குறிவைக்கும் புதிய ஜனாதிபதி
மாலத்தீவில் வெளிநாட்டு இராணுவப் படைகள் தங்குவது இனி சாத்தியப்படாது என, நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மொஹமத் முய்ஸு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
வெளியேற வேண்டும்
இந்தியா மற்றும் சீனாவுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் புதிய ஜனாதிபதி மொஹமத் முய்ஸு, தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் பேரணி ஒன்றில் கலந்துகொண்டு பேசும் போது இதை குறிப்பிட்டுள்ளார்.
Photo: X/@Muizzu2023
சனிக்கிழமை நடந்த இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் சோலியை வீழ்த்திய முய்ஸு, சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற பரப்புரைகளில் ஈடுபட்டவர்.
தற்போது சீன ஆதரவு கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியில் இருந்த இப்ராஹிம் சோலியை வீழ்த்திய நிலையில், முய்ஸு கண்டிப்பாக இந்தியாவுக்கு எதிராக களமிறங்குவார் என்றே கூறுகின்றனர்.
மேலும், மாலத்தீவுக்கு ஆதரவான கொள்கையை ஏற்கும் அனைத்து நாடுகளும் நமது நெருங்கிய நண்பர்களாகவும் நட்பு நாடுகளாகவும் இருக்கும் என முய்ஸு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நிரந்தர இராணுவ தளம்
மட்டுமின்றி, நமது நாட்டில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு ராணுவத்தினரை நாம் மிக விரைவில் வெளியேற்றுவோம் எனவும் பெயர் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெரும் செல்வாக்கு மாலத்தீவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்றே கடந்த காலத்தில் அவரது கட்சி கருதியது.
@reuters
மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தில் இந்தியா நிரந்தர இராணுவ தளத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் முய்ஸு குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால் மாலத்தீவுடன் பாரம்பரியமாக நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ள இந்தியா, அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
மட்டுமின்றி, மாலத்தீவு படைகளுக்கு தனது ராணுவத்தால் பயிற்சி அளிக்கவும் கடற்படை துறைமுகம் கட்டவும் இந்தியா உதவி வருகிறது. தற்போதைய அரசியல் மாறுதல்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவே இந்தியா தரப்பில் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |