இஸ்ரேலில் உள்ள வெளிநாட்டினருக்கு பாதுகாப்பு எச்சரிக்கை: தூதரங்கள் வெளியிட்ட அறிவிப்பு
இஸ்ரேலில் உள்ள வெளிநாட்டினருக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் பதற்றம்
ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு அடக்குமுறையை பயன்படுத்தி வரும் நிலையில், இதுவரை 3000க்கும் மேற்பட்ட மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஈரான் தங்கள் நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே சமயம் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அமெரிக்க படைகள் மீதும், இஸ்ரேல் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
வெளிநாட்டினருக்கு எச்சரிக்கை
இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும், அவசர கால உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் உடனடியாக இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைப்போல அமெரிக்கா மற்றும் பிரித்தானிய தூதரகங்களும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |