தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டவர்கள் - விமான நிலையத்தில் கைது
2026 தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மே 4 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ளார்.
தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டவர்கள்
இந்நிலையில், தமிழ்நாட்டு தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்துள்ளன வெளியாகும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா குடியுரிமை பெற்ற ஜிதேந்திரநாத், அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சந்திரசேகர ரகுபதி, இலங்கையை சேர்ந்த ஒருவர் என 3 பேர் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமிழ்நாடு வந்து விட்டு, தற்போது சொந்த நாட்டுக்கு திரும்ப முயற்சித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் அவர்களின் கை விரலில் வாக்களிக்க மை இருந்ததை வைத்து கண்டறிந்துள்ளனர்.

அதன் பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளதும், வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
அதைத்தொடர்ந்து, விசாரணைக்காக 3 பேரையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பது சட்டவிரோதம் ஆகும்.
வெளிநாட்டு குடியுரிமை பெற்ற பின்னரும் இவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்காமல் இருந்துள்ளனர்.
மேலும், சமீபத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்திலும் இவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாமல் இருந்துள்ளதா கேள்வியும் எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |