யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர்
நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்கள் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை நாட்டின் பிரதமராகப் பணியாற்ற அணுகியதாக கூறப்படுகிறது.
ஒரே பெண்மணி
நேபாளத்தின் உயர் பதவிக்கு Gen-Z குழுவில் தலைவர் ஒருவர் தலைமை தாங்க வேண்டும் என்று கிளர்ச்சியாளர்கள் விரும்புவதாக முன்பு தகவல்கள் வெளியானது.
மேலும், போராட்டக்காரர்கள் தற்போது நேபாள ராணுவத் தலைவரைச் சந்திப்பார்கள் என்று நேபாள உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் வழக்கறிஞர் ராமன் குமார் கர்ணா தெரிவித்துள்ளார்.
நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சுஷிலா கார்க்கி, நேபாளத்தில் உயர் பதவியை வகித்த ஒரே பெண்மணி ஆவார். சிறந்த சட்ட வல்லுநரான சுசீலா கார்க்கி, சட்டத்தரணியாக தனது பணியைத் தொடங்கினார்,
ஆனால் படிப்படியாக பதவி உயர்வு பெற்று ஒரு பிராந்திய நீதிபதியாகவும், இறுதியில் நாட்டின் ஒரே பெண் தலைமை நீதிபதியாகவும் ஆனார். தனது பணிக்காலத்திலும், ஓய்வுக்குப் பின்னரும், கார்க்கி எந்தக் கட்சி சார்பும் இல்லாமல், அரசியலற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்துள்ளார்.
இருப்பினும், அவரது கணவர் துர்கா பிரசாத் சுபேதி நேபாளி காங்கிரஸின் இளைஞர் பிரிவுத் தலைவராக செயல்பட்டுள்ளார். அவரது பதவிக் காலத்தில், அப்போதைய தகவல் மற்றும் தொடர்பு அமைச்சர் ஜெய்பிரகாஷ் பிரசாத் குப்தா ஊழல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
பதவி நீக்க முயற்சி
நேபாளத்தின் அதிகார துஷ்பிரயோக விசாரணை ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் லோக்மான் சிங் கார்கிக்கு எதிராகவும் அவர் துணிச்சலான தீர்ப்பை வழங்கினார்.
2017 ல், அப்போதைய மாவோயிஸ்ட் தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து அவர் பதவி நீக்க முயற்சியை எதிர்கொண்டார், ஆனால் பொதுமக்கள் மற்றும் நீதித்துறையின் எதிர்ப்புக்குப் பிறகு அந்த தீர்மானம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், Gen-Z போராட்டக்காரர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சுஷிலா கார்க்கி, தாம் இந்த போராட்டங்களை இன்று முதல் ஆதரிப்பதாகவும், 19 இளைஞர்கள் கொல்லபப்ட்டுள்ளதை குறிப்பிட்டு, அவர்களின் பெற்றோர்கள் நிலை என்ன என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |