கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் 101 வயதில் காலமானார்
கேரளாவின் முன்னாள் முதலமைச்சரான வி.எஸ்.அச்சுதானந்தன் தனது 101வது வயதில் காலமானார்.
வி.எஸ்.அச்சுதானந்தன்
பின்தங்கிய பிரிவினரின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவரும், கேரள மாநில அரசியலில் ஒரு உயர்ந்த பிரசன்னமாகவும் இருந்தவர் வி.எஸ்.அச்சுதானந்தன்.
101 வயதான இவர் மாரடைப்பு ஏற்பட்டதால், ஜூன் 23ஆம் திகதி அன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்றிலிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்த வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வி.எஸ்.அச்சுதானந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த விரைந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |