சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை, நன்றி தோனி! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவு
தோனிக்கு ஓய்வு இல்லை என்று உறுதி செய்துவிட்டேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவு செய்துள்ளார்.
நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்ததால் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.
தோனி கடைசி தொடர் இது கூறப்பட்டு வந்த நிலையில், சென்னை அணியின் தோல்வி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
Kept us whistling till the end. 7️⃣?8️⃣#RCBvCSK #WhistlePodu ?? pic.twitter.com/itts4ccxHy
— Chennai Super Kings (@ChennaiIPL) May 18, 2024
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவிட்டுள்ள டீவீட்டில் தோனி குறித்து சிலாகித்துள்ளார்.
அவரது பதிவில், ''தோல்வியின் விளிம்பில் அணி இருக்கையில் வந்த தோனியை பார்த்தவுடன் இது தான் கடைசி போட்டி என்று உள்ளுக்குள் வருந்தினேன்! ஆனால், விக்கெட் ஆவதற்கு முன்பு ஒரு சிக்ஸர் வெளியே அடித்ததை பார்த்தவுடன், இவருக்கு ஓய்வு இல்லை என உறுதி செய்துவிட்டேன்! சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! நன்றி தோனி!'' என கூறியுள்ளார்.
தோல்வியின் விளிம்பில் அணி இருக்கையில் வந்த தோனியை பார்த்தவுடன் இது தான் கடைசி போட்டி என்று உள்ளுக்குள் வருந்தினேன்!
— DJayakumar (@djayakumaroffcl) May 18, 2024
ஆனால் விக்கெட் ஆவதற்கு முன்பு ஒரு சிக்ஸர் வெளியே அடித்ததை பார்த்தவுடன் இவருக்கு ஓய்வு இல்லை என உறுதி செய்து விட்டேன்!
சாம்ராஜ்யங்கள் சரியலாம்!
சாகாவரம் கொண்ட… pic.twitter.com/LxYNl1objf
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |