புடின் பதவி நீக்கம் செய்ததால் ஜெனரல் தற்கொலை? மீட்கப்பட்ட சடலம்..வெளியான பரபரப்பு தகவல்கள்
ரஷ்யாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெனரல் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக சடலம் மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேஜர் ஜெனரல்
மேஜர் ஜெனரல் விளாடிமிர் மகரோவ்(67), ரஷ்யாவில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார். குறிப்பாக ஜனாதிபதி புடினின் எதிர்ப்பாளர்கள் மற்றும் கிரெம்ளினுக்கு விரோதமாக கருதப்படும் பத்திரிகையாளர்களை ஒடுக்குவதற்கும் அவர் தலைமை தாங்கினார்.
அதேபோல், புடினுக்கு எதிராக போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்த மகரோவ், கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், அவரை பதவியில் இருந்து நீக்கியதற்கான காரணங்கள் தெளிவாக இல்லை.
மர்ம மரணம்
இந்த நிலையில், மாஸ்கோவிற்கு அருகில் உள்ள மகரோவின் வீட்டில் காலை 7 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. அதனையடுத்து துப்பாக்கிக் குண்டு தாக்குதலுக்கு ஆளான மகரோவ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
துரதிர்ஷ்டவசமாக மருத்துவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. ஜெனரலின் குடும்பத்தினர் ரஷ்ய புலனாய்வுக் குழுவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என Moskovsky Komsomolets தெரிவித்துள்ளது.
@Twitter@igorsushko
மேலும் அவரது வீட்டில் இருந்து Berkut-2M வேட்டைத் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மகரோவ் பதவி நீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களில் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
@MIKHAIL KLIMENTYEV/RIA NOVOSTI/AFP via Getty Images