175 மில்லியன் பவுண்டுகள் கொடுத்தும் புலம்பெயர்வோர் உயிரிழப்பைத் தடுக்க பிரான்ஸ் எதுவும் செய்யவில்லை: பிரித்தானியா குற்றச்சாட்டு
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை தடுக்க பிரான்சுக்கு பிரித்தானியா இதுவரை 175 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டுள்ளது.
ஆனாலும், ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுக்க பிரான்ஸ் எதுவும் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொடரும் உயிரிழப்புகள்
பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் இதுவரை பலர் தங்கள் அருமையான உயிரை பலிகொடுத்தாயிற்று.
நேற்று, சிறு படகொன்றில் பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்ந்தோரில் 4 பேர் ஆங்கிலக் கால்வாயில் நடுங்கும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஐந்து பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட 27 பேர் இதேபோல் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் படகு கவிழ்ந்து பரிதாபமாக பலியானார்கள்.
Credit: SKY NEWS
பிரான்ஸ் மீது குற்றச்சாட்டு
இந்நிலையில், பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்ட விரோத புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பிரித்தானியா 175 மில்லியன் பவுண்டுகள் பிரான்சுக்குக் கொடுத்துள்ளது.
பிரித்தானியா பிரான்சுக்கு பெரும் தொகை கொடுத்தபிறகும், சட்டவிரோத புலம்பெயர்வோரைத் தடுக்க பிரான்ஸ் எதையும் செய்யவில்லை என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
பிரித்தானிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான Ann Widdecombe, பிரித்தானியா 175 மில்லியன் பவுண்டுகள் கொடுத்தும், சட்டவிரோத புலம்பெயர்வோரைத் தடுக்க பிரான்ஸ் எதையும் செய்யவில்லை என்றும், அவர்களுக்கு பணம் அனுப்புவதை நாம் முன்பே நிறுத்தியிருக்கவேண்டும் என்றும் கூறி தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
டோவர் பகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Natalie Elphicke, இந்த புலம்பெயர்வோரை ஆபத்தான பயணங்களுக்குள்ளாக்கும் மனிதக் கடத்தல்காரர்களுக்கு மனித உயிர்கள் மீது எந்த அக்கறையும் இல்லை என்று கூறியுள்ளதுடன், இந்த பிரச்சினை தொடர்பாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சந்திக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.
Credit: SKY NEWS