பிறந்து நான்கு மாதங்களில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள குழந்தை...
ஆந்திரப்பிரதேசத்தில், ஒரு நான்கு மாதக்குழந்தை, உலக சாதனைப் புத்தகம் ஒன்றில் இடம்பிடித்திருக்கிறாள்.
பிறந்து நான்கு மாதங்களில் உலக சாதனை
ஆத்திராவிலுள்ள Nadigama என்னுமிடத்தில் தன் பெற்றோருடன் வாழும் நான்கு மாதக் குழந்தையான கைவல்யா, ஃப்ளாஷ்கார்டுகள் எனப்படும் படங்களும் அவற்றைக் குறித்த விளக்கங்களும் கொண்ட அட்டைகளில் உள்ள படங்களை அடையாளம் கண்டுகொள்வதைக் கவனித்துள்ளார் அவளது தாயாகிய ஹேமா.
4-Month-Old Baby Sets #WorldRecord
— Informed Alerts (@InformedAlerts) February 17, 2024
Kaivalya, a 4month-old baby from Andhra Pradesh, achieves a remarkable feat by recognizing 120 types of pictures, including birds, vegetables, & animals. Kaivalya's talent acknowledged by Noble World Records highlights early cognitive abilities pic.twitter.com/sTp1Z3IE3d
தகவலறிந்த Noble World Records என்னும் உலக சாதனை அமைப்பைச் சேர்ந்த குழுவினர் குழந்தையை சென்று பார்க்க, அவளது திறமையைக் கண்டு வியந்து, அவளுக்கு ’World's first four months baby to identify 100+ flashcards’ அதாவது, 100க்கும் அதிகமாக ஃப்ளாஷ்கார்டுகளை அடையாளம் கண்டுள்ள முதல் நான்கு மாதக் குழந்தை, என்னும் பட்டத்தைக் கொடுத்துள்ளார்கள். இந்த சம்பவம் இம்மாதம், அதாவது, பிப்ரவரி 3ஆம் திகதி நிகழ்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |