பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து திரும்பியபோது..நான்கு பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!
இந்திய மாநிலம் கர்நாடகாவில் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் நான்கு பெண்கள் உட்பட 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் கொபல் மாவட்டம் பின்யல் கிராமத்தைச் சேர்ந்த தேவப்பா கூப்பட்(62) என்பவர், உறவினர் ஒருவருடைய பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்கு காரில் சென்றுள்ளார்.
கொபல் நகருக்கு சென்றுகொண்டிருந்த அவருடன் உறவினர்கள் பலரும் பயணித்தனர். பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு திரும்பியபோது, தேவப்பா பயணித்த கார் மீது வேகமாக வந்த லொறி ஒன்று மோதியது.
இந்த கோர விபத்தில் 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். இரவு 11 மணியளவில் நடந்த விபத்தில் மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
dailythanthi
இதனையடுத்து இதுதொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயமடைந்தவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.