பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்! முதல் சுற்றில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? வெளியான கருத்து கணிப்பு முடிவுகள்
பிரான்ஸ் ஜனாதிபதிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், முதல் சுற்றுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
பிரான்சில் வரும் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் இமானுவேல் மேக்ரான், Eric Zemmour மற்றும் Marine Le Pen ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர இன்னும் சிலர் போட்டியிடுகின்றனர். இதனால், தற்போதே பிரான்சில் இதற்கான வேட்பாளர் அறிவிப்பு, வாக்குறுதிகள் போன்றவை ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில், இந்த தேர்தல் குறித்து முதல் கட்ட வாக்கெடுப்பில் யார் அதிக வாக்குகளை பெறுவார்கள் என்ற கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், இமானுவேல் மேக்ரானுக்கு 20 முதல் 25 சதவீத வாக்குகளும், Eric Zemmour 17 முதல் 18 சதவீத வாக்குகளும், Marine Le Pen 16 சதவீத வாக்குகளும் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ரிபப்ளிக் சார்பில் போட்டியிடும், Xavier Bertrand 14 சதவீத வாக்குகள், இவரைத் தொடர்ந்து Valérie Pécresse 10 சதவீதம் மற்றும் Michel Bariner 8 சதவீதம் வாக்குகளை பெறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
இடதுசாரி கட்சியில் அதிக வாக்குகளை பெறும் வாய்ப்பு Jean-luc-Melenchon-கே உள்ளது குறிப்பிடத்தக்கது.