சாலைக் கொலை... பிரான்ஸ் நாடாளுமன்றம் செய்ய இருக்கும் மிக முக்கிய சட்ட மாற்றம்
மது அருந்திவிட்டு அல்லது போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்குக் காரணமாக இருப்போர் பிரான்சில் இனி சாலைக் கொலைக் குற்றம் செய்தவர்கள் என அழைக்கப்படுவார்கள்.
அறிமுகமாகும் புதிய சொற்பயன்பாடு
தற்போது, இப்படி மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி விபத்தை ஏற்படுத்தி மரணத்துக்குக் காரணமாக இருப்போர், தற்செயல் கொலை அல்லது மறைமுகக் கொலை செய்ததாக கருதப்படும் நிலையில், இனி அத்தகைய குற்றச்செயல் சாலைக் கொலை என அழைக்கப்படும் என பிரான்ஸ் பிரதமர் Élisabeth Borne அறிவித்துள்ளார்.
இந்த குற்றச் செயலுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட அதே தண்டனைதான். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், இனி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆதரவு அளிக்கப்படும் என்றார் அவர்.
இந்த புதிய சொற்பயன்பாடு எப்போது அமுலுக்கு வரும்?
இந்த புதிய குற்றச்செயல் நாடாளுமன்றத்தில் சட்டமாற்றத்துக்குட்படுத்தப்பட்டாகவேண்டும். ஆகவே, இந்த புதிய சொற்பயன்பாடு எப்போது அமுலுக்கு வரும் என்பது தெரியவில்லை.
சமீபத்தில், பிரபல நகைச்சுவையாளரான Pierre Palmade என்பவர், போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில், மூன்று பேர் படுகாயமடைந்தார்கள். ஒரு ஆண், அவரது ஆறு வயது மகன் மற்றும் கர்ப்பிணிப்பெண் ஒருவர் காயமடைந்த நிலையில், அந்த கர்ப்பிணிப்பெண்ணின் குழந்தை இறந்துபோனது.
Photograph: Bertrand Guay/AFP/Getty
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரசுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே, தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |