3 மில்லியன் பேருக்கு நிதி உதவி வழங்க பிரான்ஸ் முடிவு
சுய தொழில் செய்யும் 3 மில்லியன் பேருக்கு கூடுதல் நிதி உதவி வழங்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.
நாட்டிலுள்ள 3 மில்லியன் பேருக்கு கூடுதல் நிதி உதவி வழங்கும் வகையில் மசோதா ஒன்றை பிரான்ஸ் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதா, freelance முறையில் பணி செய்வோர், ஒப்பந்ததாரர்கள், சுய தொழில் செய்வோர் மற்றும் சிறு தொழில் செய்வோரின் தொழில் தடுமாறிக்கொண்டிருந்தாலோ, தோல்வியடைந்தாலோ அவர்களுக்கு நிதி உதவி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
செனேட்டிலும், சட்டசபையிலும் ஏகமனதாக இந்த மசோதா நிறைவேற்றபட்டுள்ள நிலையில், இடது சாரியினர் மட்டும் மசோதாவின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்று கூறி வாக்களிப்பதிலிருந்து விலகிக்கொண்டனர்.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சட்டம் மூன்று மாதங்களில் அமுலுக்கு வரும் நிலையில், தனிப்பட்ட பணியாளர்களின் தொழில் திவாலானாலும் அவர்களது பொருட்கள் பறிமுதல் செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.