உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கத்தை கண்டுபிடித்த பிரான்ஸ்!
பிரான்சில் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் 92 டிரில்லியன் டொலர் மதிப்புடைய உலகின் மிகப்பெரிய வெள்ளை ஹைட்ரஜன் களஞ்சியத்தை கண்டுபிடித்து சர்வதேச ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது எதிர்காலத்திற்கான சுத்தமான எரிசக்தியாக கருதப்படும் இயற்கை ஹைட்ரஜன் கண்டுபிடிப்பில் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
எவ்வளவு பெரும் இந்த கண்டுபிடிப்பு?
- 46 மில்லியன் டன் வெள்ளை ஹைட்ரஜன் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இதன் மொத்த மதிப்பு 92 டிரில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- பூமியின் அடியிலிருந்து 1,250 மீட்டர் ஆழத்தில் இந்த மிகப்பெரிய களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டது.
வெள்ளை ஹைட்ரஜன் - எதனால் தனித்துவமானது?
இது பூமியின் இயற்கையான செயல்முறைகளால் உருவாகும் ஹைட்ரஜன் வகையாகும்.
இதை எரிக்கும்போது மட்டுமே தண்ணீர் வெளியிடுகிறது, அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை.
மறுசுழற்சி செய்யக்கூடிய, சுற்றுச்சூழல் மாசற்ற எரிசக்தி ஆதாரம் என்பதால் எதிர்கால எரிசக்தியாக கருதப்படுகிறது.
இதை உற்பத்தி செய்ய எந்த விதமான கிரீன் ஹவுஸ் வாயுக்களும் உருவாகாது, எனவே கார்பன் நீக்கமற்ற எரிசக்தியாக இது செயல்படும்.
இந்த கண்டுபிடிப்பின் உலகளாவிய தாக்கம்
உலகின் எரிசக்தி தேவை தொடர்பான போட்டியில் பிரான்ஸ் முன்னணிக்கு வரலாம்.
மூலோபாய மாற்றத்தால் உலகளாவிய ஹைட்ரஜன் சந்தை மிகப்பெரிய மாற்றத்திற்குச் செல்லும்.
மாசு ஏற்படுத்தும் எரிசக்திகளுக்கு மாற்றாக இது பயன்படுத்தப்படலாம்.
இந்த கண்டுபிடிப்பு பிரான்ஸின் முக்கியமான ஆற்றல் வெற்றியாக மட்டுமல்லாமல், உலகளவில் மீளச்சுழற்சி செய்யக்கூடிய எரிசக்திக்கான வரலாற்றுச் செயல்முறையாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
France Hydrogen Deposit, France's recent discovery of white hydrogen