தொடர்ந்து 31 நாட்களாய் பெய்யாத மழை! பிரான்ஸில் வரலாறு காணாத வறட்சி
பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து 31 நாட்களாகக் குளிர்காலத்தில் மழை பெய்யாமல் இருப்பது இதுவே முதல் முறை என அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எப்போதுமில்லாத வறட்சி
கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியால் ஐரோப்பாவின் பல பகுதிகளில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து 31 தினங்களாகக் குளிர்காலங்களில் மழை இல்லாததால் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறைந்த நிலத்தடி நீர் மட்டம்
ஜனவரி 21 முதல் தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் அளவுக்குக் கூட மழை இல்லாதது. 2021ல் வசந்த காலத்தில் ஏற்படும் வறட்சிக்கு நிகராக ஒப்பீடு செய்யப்படுகிறது.
மழைப்பொழிவுடன் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகப்படுத்தக் குளிர்காலங்களில் பெய்யும் மழை முக்கியமானதாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர் நிகஸ் காலநிலை கண்காணிப்பு (C3S) படி பிரான்ஸ், பிரித்தானியா, ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவு வெப்பநிலை அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது.
உலக நாடுகளுக்கு எச்சரிக்கை
ஐரோப்பியக் கடைகளில் வாடிப்போன பயிர்களின் தாக்கத்தைக் காண முடிவதாகவும், நிலத்தடி நீர் மட்டத்தின் குறைபாடு அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் காரணமாக விவசாய மற்றும் சுற்றுச்சூழல் வறட்சி குறைந்தது 20 மடங்கு அதிகமாக இருப்பதாகக் கடந்த ஆண்டு உலக வானிலை அளவீடுகளில் தெரிகிறது.
இது போன்ற தீவிர வறண்ட காலங்கள் உலகளாவிய வெப்ப மயமாதலுடன் மிகவும் பொதுவானதாக மாறும் என்று உலக சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.