இந்தியர்கள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை.. சூடானில் இருந்து மீட்ட பிரான்ஸ்
சூடானில் இருந்து 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை பிரான்ஸ் மீட்டுள்ளது.
உள்நாட்டு போர்
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் சிக்கியுள்ளனர். சூடானியர்கள் மற்றும் வெளிநாட்டினர் என சுமார் ஐந்து மில்லியன் மக்கள் நகரை விட்டு வெளியேற முயன்றனர்.
இந்த நிலையில் இந்தியர்கள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை பிரான்ஸ் வெளியேற்றியுள்ளது.
பிரான்ஸ் தூதரகம்
இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், 'பிரெஞ்சு மக்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு, இரண்டு இராணுவ விமானங்கள் சுழற்சி முறையில் இந்தியர்கள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை வெளியேற்றியுள்ளது' என தெரிவித்துள்ளது.
சூடானில் இதுவரை நடந்த போரில் குறைந்தது 420 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 3,700 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.