இந்தியப் பெண்மணி ஒருவருக்கு பிரான்சின் உயரிய விருது: அவர் யார் தெரியுமா?
இந்தியப் பெண்மணி ஒருவருக்கு பிரான்சின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது.
யார் அவர்?
பிரான்சின் உயரிய விருதான செவாலியே (Chevalier de la Légion d'Honneur, Knight of the Legion of Honour) என்னும் விருது, கிரண் நாடார் என்னும் இந்தியப் பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கலைப் பொருள்கள் சேகரிப்பாளரும் கொடையாளருமான கிரண் நாடாருக்கு, அந்த உயரிய விருதை, பிரான்ஸ் நாட்டின் இந்தியாவுக்கான தூதரான Emmanuel Lenain வழங்கி கௌரவித்தார்.
கிரண் நாடார், தமிழகத்தின் திருச்செந்தூரில் பிறந்த தொழிலதிபர் ஷிவ் நாடாரின் மனைவியாவார்.
Photo Credit: M. Vedhan
எதற்காக இந்த விருது?
கலைத் துறையில் கிரண் நாடாரின் சிறந்த பங்களிப்பு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் கலாச்சாரத்தில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் இந்திய பிரெஞ்சு கலாச்சார உறவுகளை வளர்ப்பதில் அவரது முக்கிய பங்கு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிரண் நாடார், இந்திய பிரெஞ்சு கலாச்சார உறவுகள் மற்றும் கலை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். மேலும், கிரண் நாடார் கலை அருங்காட்சியகத்தின் (KNMA) தலைவராகவும், ஷிவ் நாடார் அறக்கட்டளையில் அறங்காவலாராகவும் உள்ளார்.
ஷிவ் நாடார் HCL Technologies நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.