27 புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி மரணம்: அலட்சியம் காட்டிய பிரெஞ்சு வீரர்கள் மீது குற்றச்சாட்டு
ஆங்கில கால்வாயில் 27 புலம்பெயர்ந்தோரை மீட்க தவறியதற்காக 5 மீட்பு பணியாளர்கள் மீது பிரான்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
27 புலம்பெயர்ந்தோர் மரணம்
2021-ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்தோர் செய்த பேரிடர் அழைப்புகளுக்கு பதிலளிக்கத் தவறியதற்காக ஐந்து பிரெஞ்சு கடல்சார் மீட்புப் பணியாளர்கள் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
அவர்கள் செயல்பட தவறிய இந்த சோக சம்பவத்தில் 27 புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் ஆறு பெண்கள் மற்றும் ஒரு சிறுமி அடங்குவர். இறந்தவர்களில் நான்கு சடலங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவே இல்லை.
இந்த சம்பவத்தில் புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயில் மெலிதான படகில் பயணம் செய்தனர்.
Representative Image- reuters
ஐந்து கடல்சார் மீட்புப் பணியாளர்கள் மீது குற்றசாட்டு
முன்னதாக, ஆணவக் கொலை மற்றும் புலம்பெயர்ந்தோர் சட்டவிரோதமாக நுழைவதற்கு உதவிய குற்றத்திற்காக 10 பேர் மீது பிரான்ஸ் பொலிசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இப்போது, ஐந்து ராணுவ வீரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். ஆனால், தற்போது அந்த ஐந்து பேரும் காவலில் வைக்கப்படவில்லை.
Representative Image- Reuters
பிரெஞ்சு வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
புலம்பெயர்ந்தோர் 15 முறை செய்த அவசர அழைப்புகளை பிரெஞ்சு கடல்சார் மீட்புப் பணியாளர்கள் புறக்கணித்து, அதற்குப் பதிலாக பிரித்தானிய அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைத்தனர்.
புலம்பெயர்ந்தோர் தங்கள் (லைவ் லொக்கேஷனை) இருப்பிடத்தையும் பிரான்ஸ் அதிகாரிகளுடன் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொண்டனர், மேலும் அவர்களின் படகு மூழ்கி இயந்திரம் பழுதடைந்ததையும் கூறியுள்ளனர். ஆனால், பணியில் இருந்த பணியாளர்கள் படகுக்கு எந்த உதவியும் அனுப்பவில்லை.