பிரான்சில் இந்த பகுதியில் டெல்டா கொரோனா பரவல் தீவிரம்! சீக்கிரம் இதை செய்யுங்க: யாரும் தப்ப போவதில்லை என சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
பிரான்சில் குறிப்பிட்ட பகுதியில் டெல்டா கொரோனா பரவல் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த தொற்றில் இருந்து யாரும் தப்ப போவதில்லை என்று சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் மட்டும் இந்த வைரஸால் சுமார் 4 லட்சத்திற்கும் மேல் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த டெல்டா வைரஸ் இப்போது பிரான்சில் தீவிரமாக பரவி வருகிறது.
அதிலும், Nouvelle-Aquitaine பிராந்தியத்தில் மிகவும் அதிகளவில் டெல்டா கொரோனா பரவல் உள்ளது. இது குறித்து Nouvelle-Aquitaine-ன் பிராந்திய சுகாதார நிறுவனமான ARS இன் தலைவர் Benoît Elleboode, கொரோனா தடுப்பூசியை மிக வேகமாக அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். அப்படி தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால், மிகவும் மோசமான, ஆபத்தான, இந்த டெல்டா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்கப் போவதில்லை.
பல சர்வதேச நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த டெல்டா வைரசின் மோசமான தொற்று எனக்கு இந்த ஆபத்தை உணர்த்தி உள்ளது என்று எச்சரித்துள்ளார்.
மேலும், இதே போன்று எந்தெந்த மாவட்டங்களிலும், மாகாணங்களிலும், செய்யப்படும் கொரேனாப் பரிசோதனையில் எத்தனை சதவீதம் டெல்டா வைரசின் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில், சுகாதார நிறுவனங்களான ARS வெளியிட்டுள்ளது.
அதன் பட்டியல் இதோ...
Landes : 81.4
Somme : 77.7
Loir-et-Cher : 76.9
Haute-Savoie : 65
Jura : 61.2
Alpes-Maritimes : 57
Hauts-de-Seine : 49.6
Calvados : 47
Isère : 46.2
Bas-Rhin : 45.7
Moselle : 42.9
Drôme : 42.4
Paris : 38.7
Var : 38.6
Charente-Maritime : 38.2
Doubs : 37.5
Vaucluse : 36.4
Indre-et-Loire : 36.4
Savoie : 35.5
Loire-Atlantique : 34.3
Ille-et-Vilaine : 31.7
Seine-Saint-Denis : 31.7
Seine-et-Marne : 31.2
Gironde : 31
Ain : 30.9
Deux-Sèvres : 30.4
Bouches-du-Rhône : 29.4
Côte-d’Or : 27.7
Val-de-Marne : 25.6
Vienne : 25
Pas-de-Calais : 24.8
Rhône : 23.9
Val-d’Oise : 23.5
Puy-de-Dôme : 23
Côtes-d’Armor : 22.6
Aisne : 22.5
Yvelines : 20.8
Meurthe-et-Moselle : 20.5
Tarn : 18.9
Mayenne : 18.4
Hérault : 18.4
Essonne : 17.6
Nord : 17.4
Oise : 17
Seine-Maritime : 16.7
Pyrénées-Atlantiques : 16.7
Maine-et-Loire : 15.8
Morbihan : 15.6
Haute-Garonne : 14.3
Finistère : 12.9
Sarthe : 12.5
Haut-Rhin : 12.4
Loire : 12.2
Pyrénées-Orientales : 12
Manche : 11.9
Loiret : 11.2
Gard : 11.1
Vendée : 10.3
Eure : 9.8
Saône-et-Loire : 9.4
Marne : 8.2
La Réunion : 2
Guyane : 0.4
Martinique : 0