புடினுக்கு வழங்கப்பட்ட உயரிய விருதைப் பறிக்க பிரான்ஸ் திட்டம்?: மேக்ரான் அளித்துள்ள விளக்கம்...
பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், சமூக ஆர்வலர்கள் சிலரும் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு வழங்கப்பட்ட பிரான்சின் உயரிய விருது ஒன்றை திரும்பப் பெறவேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
பிரான்சின் உயரிய விருது பெற்ற புடின்
2006ஆம் ஆண்டு, பிரான்ஸ் ஜனாதிபதி Jacques Chirac, ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு, பிரான்சின் உயரிய விருதான Legion of Honour என்னும் விருதை வழங்கினார்.
தற்போது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதைத் தொடர்ந்து, அந்த விருதை பிரான்ஸ் திரும்பப் பெறவேண்டும் என பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், சமூக ஆர்வலர்கள் சிலரும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
GETTY IMAGES
இமானுவல் மேக்ரானின் பதில்
அது எளிதாக எடுக்கக்கூடிய ஒரு முடிவல்ல என்று கூறியுள்ள மேக்ரான், அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அது சரியான தருணத்தில் எடுக்கப்படவேண்டும் என்றும் கூறினார். அதே நேரத்தில், தான் இதற்கு முன்பு அப்படிப்பட்ட முடிவுகளை எடுத்துள்ளதையும் நினைவுகூர அவர் தவறவில்லை.
ஹாலிவுட் படத்தயாரிப்பாளரான Harvey Weinstein மீது ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்ட Legion of Honor விருதை 2017ஆம் ஆண்டு மேக்ரான் பறித்தது குறிப்பிடத்தக்கது.