பிரான்சில் மீண்டும் பகீர் சம்பவம்: 15 வயது சிறுவனை ஓரினச்சேர்க்கை துஷ்பிரயோகம் செய்த பாதிரியார் கைது
பிரான்சில் சிறுவனை ஓரினச்சேர்க்கை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக பாதிரியார் கைது செய்யப்பட்டார்.
வடமேற்கு பிரான்ஸைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் 15 வயது சிறுவனை போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறுவன் துஷ்பிரயோகம்
இருவரும் கடந்த வாரம் Grindr எனும் ஆப்பை பயன்படுத்தி பாரிஸில் சந்தித்துள்ளனர். பிறகு, ரென்னெஸ் அருகே ஒரு சிறிய திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார், சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் போதை மருந்து கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
50 வயதான போதகர் ஒரு ஹோட்டல் அறையில் சிறிய அளவிலான பல மருந்துகளை சிறுவனுக்கு வழங்கியதாக்க கூறப்படுகிறது. இதில் எக்ஸ்டஸி-டெரிவேட்டிவ் MDMA மற்றும் GHB போன்ற ஒரு இரசாயனமும் அடங்கும், இந்த மருந்து டேட்டிங்-பலாத்காரத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு மோசமான போதைப்பொருளாகும்.
AFP
அதனைத் தொடர்ந்து, சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவர் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தொடர் குற்றச்சாட்டு
பிரான்ஸில் உள்ள தேவாலயத்தை கடுமையாக களங்கப்படுத்திய, தொடர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் இந்த வழக்கு சமீபத்தில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில் கார்டினல் ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலம் பிரெஞ்சு கத்தோலிக்கர்களை மீண்டும் திகைக்க வைத்தது.
பிரான்சின் மிக மூத்த கத்தோலிக்க அதிகாரிகளில் ஒருவரான ஜீன்-பியர் ரிக்கார்ட், திங்களன்று 1980-களில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததை ஒப்புக்கொண்டார், இது நீதிமன்ற விசாரணையைத் தூண்டியது.
மேலும் ஓய்வு பெற்ற மற்றும் பணிபுரியும் 10 பிஷப்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக தேவாலய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
கடந்த ஏழு தசாப்தங்களாக மதகுருக்களால் 216,000 சிறார்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக 2021-ல் கண்டுபிடிக்கப்பட்டது.