முடிவுக்கு வருமா இஸ்ரேல்-லெபனான் இடையிலான போர்? பிரான்ஸ் இராஜதந்திர முயற்சி
இஸ்ரேல்-லெபனான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக பிரான்ஸ் அமைதி திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது.
இஸ்ரேல்-லெபனான் போர்
இஸ்ரேல்-லெபனான் இடையிலான போர் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பிரான்ஸ் இராஜதந்திர முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது.
பிரான்ஸ் முன்மொழிந்துள்ள திட்டத்தின் படி, போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் நாட்டை தனி நாடாக லெபனான் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற நிபந்தனை முன்மொழியப்பட்டுள்ளது.

பிரான்ஸின் இந்த திட்டத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றன.
வரைவு திட்டத்தின் முக்கிய நோக்கம்
புளூ லைன் எனப்படும் எல்லைப் பகுதியில் சண்டையை நிறுத்தி பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்குதல்.
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துதல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பை ஆயுதங்களை கைவிட செய்ய சர்வதேச அளவில் அழுத்தம் கொடுத்தல் ஆகியவை முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |