குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: அதிரடி தாக்குதல் நடத்திய உக்ரைன்
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யாவை குறிவைத்து தாக்குதல்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையானது நான்கு ஆண்டுகளை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் புதிய தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் இரண்டு முக்கிய இலக்குகளை உக்ரைனிய பாதுகாப்பு படை சனிக்கிழமை இரவு வெற்றிகரமாக தாக்கி அழித்து இருப்பதாக உக்ரைன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உக்ரைனின் இந்த தாக்குதலில் முக்கிய இலக்காக Afipksky நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது ரஷ்யாவின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்பில் 2.1% மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த எண்ணெய் சுத்திகரிப்பு மையம், ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, போரில் இராணுவத்திற்கு தேவையான ஏரிபொருளை வழங்கும் முக்கிய ஆதாரமாகவும் செயல்பட்டு வந்ததை உக்ரைன் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் காவ்காஸ் துறைமுகத்தின் மீது உக்ரைனிய பாதுகாப்பு படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இதில், உயிரிழப்புகள் அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்த எந்தவொரு தகவலும் தெரிய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |