பிரான்ஸில் வெடித்த கலவரம்: மோட்டார் சைக்கிள் கடையை சூறையாடிய கலவரக்காரர்கள்: வீடியோ
பிரான்ஸ் நாட்டில் வெடித்த கலவரம் இன்னும் ஓயாத நிலையில், கலவரக்காரர்கள் சிலர் பூட்டப்பட்டு இருந்த இருசக்கர வாகன கடையில் இருந்து பைக்குகளை திருடிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் கலவரம்
பிரான்ஸ் தலைநகரான பாரிஸின் நாண்டெர்ரே என்ற புறநகர் பகுதியில் பொலிஸார் ஒருவரால் நெயில் எம்(Nael m) என்ற 17வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.
இதில் பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்கள், கார்கள் மற்றும் பொதுசொத்துகள் பல தீ வைத்து எரிக்கப்பட்டன.
அத்துடன் இந்த கலவரத்தை கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 40,000 பொலிஸார் நாடு முழுவதும் பணியில் அமர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் நேற்றைய நிலவரப்படி கலவரத்தில் ஈடுபட்ட 667 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதில் பெரும்பாலானோர் 14 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலவரத்தில் பொலிஸார்கள் 249 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Motorcycle store being looted by rioters in Lyon, France.pic.twitter.com/Vq8HWWXsft
— The Spectator Index (@spectatorindex) June 30, 2023
இருசக்கர வாகனங்கள் திருட்டு
கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் திணறி வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டின் லியோன் பகுதியில் உள்ள இருசக்கர சைக்கிள் கடையில் கலவரக்காரர்கள் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இது தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள காட்சிகளில் கலவரக்காரர்கள் மோட்டார் சைக்கிள் கடைக்குள் இருந்து இருசக்கர வாகனங்களை திருடி கொண்டு எடுத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |