சினிமா பார்க்க வீடியோ கேம் வாங்க இளைஞர்களுக்கு பணம் கொடுக்கும் பிரான்ஸ் அரசு!
பிரான்ஸ் அரசு தனது நாட்டிலுள்ள 18 வயது இளைஞர்களுக்கு 300 யூரோக்கள் மதிப்புடைய கலாச்சார பாஸ் ஒன்றை வழங்குகிறது. அதன்படி, ஆண்டொன்றிற்கு சுமார் 800,000 இளைஞர்கள் ஆப் ஒன்றை டவுன்லோட் செய்து அந்த 300 யூரோக்கள் மதிப்புடைய கலாச்சார பாஸை பெற்றுக்கொள்ள இருக்கிறார்கள்.
அந்த பாஸை பயன்படுத்தி சினிமா டிக்கெட் வாங்கலாம், அருங்காட்சியகம் செல்லலாம், புத்தகங்கள் வாங்கலாம் வீடியோ கேம்கள் மற்றும் இசைக்கருவிகள் கூட வாங்கலாம். இந்த பாஸை 18 வயது இளைஞர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு வைத்து செலவு செய்யலாம்.
இந்த கலாச்சார பாஸுக்கு நாட்டில் நல்ல வரவேற்பு இருந்தாலும், கொஞ்சம் பேர் அதையும் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறு யாருமல்ல, 19 வயதானவர்கள்தான், அதுவும் குறிப்பாக சமீபத்தில்தான் தங்கள் பிறந்தநாளைக் கொண்டடியவர்கள், ஏன் 18 வயது உள்ளவர்களுக்கு மட்டும் அந்த பாஸ் கொடுத்தார்கள், 18 வயது உள்ளவர்களுக்கு அது எதற்கு, 19 முதல் 25 வயது உள்ளவர்களுக்குத்தான் அது அதிகம் பயன்படும் என்று கூறி தங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல், சிலர் இந்த விடயத்திற்கு அரசியல் சாயமும் பூசியுள்ளார்கள். அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வர உள்ள நிலையில், புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளவர்களை குறிவைத்துத்தான் இந்த பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளார்கள்.
C'est dur d'avoir 19 ans en 2021.#PassCulture
— ?????? (@MatteoUrru_) May 21, 2021