புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரான்சுக்கு ஒரு பில்லியன் பவுண்டுகள்: கையெழுத்தாகும் புதிய ஒப்பந்தம்
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியா பிரான்சுக்கு கொடுக்கும் தொகை ஒரு பில்லியன் பவுண்டுகளைத் தாண்ட உள்ளது.
கையெழுத்தாகும் புதிய ஒப்பந்தம்
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியாவும் பிரான்சும் மீண்டும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன.

ஏற்கனவே கன்சர்வேட்டிவ் கட்சியினர் பிரித்தானியாவை ஆளும்போது, சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு 480 மில்லியன் பவுண்டுகள் கொடுக்க ஒப்புக்கொண்டனர்.
தற்போது, பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள இருக்கிறார்.
அந்த ஒப்பந்தத்தின்படி, சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக, அதாவது, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காக, பிரித்தானியா பிரான்சுக்கு 662 மில்லியன் பவுண்டுகள் கொடுக்க உள்ளது.
ஆக, சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு பிரித்தானியா கொடுக்கும் தொகை ஒரு பில்லியனைத் தாண்ட உள்ளது.

அத்துடன், புதிய ஒப்பந்தத்தின்படி, பிரான்ஸ் அதிகாரிகள் கடற்கரைகளை கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்த இருக்கிறார்கள், சுமார் 1,100 பொலிசார், உளவுத்துறையினர் மற்றும் ராணுவத்தினர், அதாவது, முன்பை விட 40 சதவிகிதம் அதிகம் பேர், கண்காணிப்புப் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
மேலும், கடற்கரைகளில் கூடும் கூட்டத்தைக் கலைக்க சிறப்பு பயிற்சி பெற்ற 50 கலவரத் தடுப்பு பொலிசாரைக் கொண்ட அமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டால் முதலில் 160 மில்லியன் பவுண்டுகள் பிரான்சுக்கு வழங்கப்படும்.
பிரான்சின் நடவடிக்கைகளால் சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறையாவிட்டால், பிரான்சுக்கு பணம் கொடுக்கப்படமாட்டாது என்கிறது பிரான்சுடன் பிரித்தானியா செய்துகொள்ளவிருக்கும் புதிய ஒப்பந்தம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |